வட ஈழ மறவர்மான்மியம்
☆▪☆▪☆▪☆▪☆▪☆▪☆▪☆▪☆▪☆
ஈழமும் பாண்டியரும்
ஈழ நாட்டில் தமிழனின் குடியேற்றம் எப்போது ஏற்பட்டதென்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியாமலிருக்கிறது. எனினும் விஜயன் இலங்கைக்கு வருமுன் பன்னெடுங்காலமாகத் தமிழரே இத்தீவை ஆட்சி செய்தார்களென்று பழங்காலச் சரித்திரங்கள் கூறுகின்றன. சேர, சோழ, பாண்டிய நாட்டிலிருந்து தமிழ் மக்கள் குடியேறுமுன், நாகர் என்னும் சாதியார் இத்தீவை ஆண்டுள்ளார்கள். இவர்களின் குலப்பெயர்களை அடிப்படையாகக் கொண்டே நாகபட்டணம், நாகபுரம், நாககுன்று, நாகர்கோயில் முதலாம் இடப்பெயர்களும் வழங்கியுள்ளன. இலங்கையிலும் பண்டைக்காலந்தொட்டு வழங்கியுள்ள நாகவழிபாடும் அதன் ஆலயங்களுமிருப்பதை அறியலாம். நயினாதீவு, நாகபூஷணி அம்மன் ஆலயம் இதற்கோர் எடுத்துக் காட்டாகும்.Continue reading “வட ஈழ மறவர்மான்மியம்”
மூவேந்தரும் இல்லாமல் தோற்றுவித்த தமிழ் சங்கமும் போய், 21 தலைமுறைக்கு தமிழ் வளர்க்கும் கோ வேந்தர் எவருமின்றி, எந்த மன்னரும் கொடையளிக்காத காலத்தில், பாட்டியற்றும் பாவேந்தர்கள் வாழ்க்கை நலிவுற்றும், ஆதரிப்பார் இன்றியும் பாழ்பட்டு கிடந்தது.
அவர்கள் காற்றடிக்கும் இடமெல்லாம் இலவம் பஞ்சு பறப்பதைப்போல, ஆதரிப்பாரின்றி அன்னார் ஆலாய்ப் பறந்து திரியும் போது, கேட்டதெல்லாம் தரும் தேவேந்திரத் தாருவான கற்பக விருட்சம் போல இருந்து, தமிழையும் தமிழ் புலவர்களின் வாழ்வினையும் வளமாக்கியவன் மன்னன் ஜெயதுங்கன் -.என்று சேதுபதிகளைப் பற்றிப் பாடுகிறது.
ஜெயதுங்கன் என்பது சோழரின் ஒரு பட்டம்.
மேலும்,
இந்த மண்டலங் காக்கும் அதிபதிகள் வம்சத்து பதி. மன்னர்களுக்கு நீதிபதியாக விளங்குபவன், எதிரிகளும் தலைவனாக ஏற்கும் தலைவன், சமஸ்தானங்களின் பதியாக இருப்பவன், படைசெலுத்திய நிலமெல்லாம் வெற்றிபெற்று , வெற்றிமகளை துணையாகக் கொண்டவன், காலாட்படை, தேர்ப்படை, யானைப்படை, கொண்டு விளங்குபவனாகிய தேனைப் போல இனிமையான சேதுபதியைத் தரிசிப்பது, ராமேஸ்வரத்தில் வாழும் ராமலிங்க நாதரைத் தரிசனம் செய்வது போன்றதாகும்
-என்று ராமநாதரைத் தரிசித்து சேதுபதி தரிசனம் செய்யும் ஐதீகம் விளக்கப்படுகிறது.
தவிர,
சேதுபதி என்ற பெயருடன் மனித அவதாரம் கொண்டாய், இந்த பெரும் பூமியில் நீயே ரகுராமன் ஆவாய், – என்று சேதுபதியே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாகப் பாடப்படுகிறார்.
சங்கரன்கோயில் கோமதியாபுரம் தெருவிலிருக்கும் கிருஷ்ணவாணாதிராயத்தேவர் மூத்த குமாரர் திரு. கி.பழனித்தேவர் அவர்கள் வசம் இருக்கும் 1911 ம் ஆண்டித்திய அனுபவ ஒத்தியல் பத்திரம்.
செய்தி
– – – – – – –
1911 வருடம் ஜூலை தியதி 1க்கு முதல் விரோதிக்கிருதி வருடம் ஆடி மாதம் சனிவாரம் சுக்லபக்ஷ்ம் சஷ்டி திதி மிதுனச் சூரியன் சிம்மச் சந்திரன் கூடிய சுபதினத்தில் கஸ்பா சங்கநயினார் கோவில் தானிருக்கும் வாணாதிராய வலசை மேற்படி கலெக்கட்டார் வலசையிலிருக்கும் உறங்காலி வாணாதிராயத்தேவர் “மாவெலி வாணா குலத்து மரவர் ஜாதி” விவசாயம். மேற்படியார் குமாரர் சங்கரசுப்பு வாணாதிராயத்தேவர் / மேற்படியார் மகன் மேற்படியார் ஜாதி விவசாயம் ஜீவனம் தூங்கன்வாணாதிராயத்தேவன்
2 பேர்களும் மேற்படி ஊரிலிருக்கும் மேற்படி ஜாதி விவசாயம் ஜீவனம் சொக்க வாணாதிராயத்தேவருக்கு எழுதிக் கொடுத்த நஞ்சை நிலம் அனுபவ ஒத்தியல் என்னவென்னால்,
நம்முடைய காணிவயல் கஸ்பா சங்கநயினார் கோவில் கண்டிகைப்பேரி மேற்படியூரிலிருக்கும் ஆனையூர் மலைக்கு மேற்காயுள்ள சித்திரபுத்திரத்தேவர் காணி நஞ்சைக்கு கீழ்பால் எல்லைக்கு வடக்கு வீறப்பத்தேவர் காணி நஞ்சைக்கு தெற்கு …. பாறைக்கு கிழக்கு எல்கையிலுள்ள புஞ்சைக்குக்கீழ் சித்திரபுத்திர பூலித்துரை மடத்துக்கு வட மேற்கு நீள்பாக எல்லை ஆக 3 குழி நிலம் கொடுக்க சம்மதிக்கிறோம். இது எது காரணம் பற்றியென்னால்
திருநெல்வேலி ஜில்லா ஆக்டிங் கலெக்கட்டார் சுபாவில் சென்ற பிறகு சாணாரைக் குத்திப்போட்ட காரணத்தினாலே துப்பாக்கி குண்டில் மரணிச்சபடியினாலே பட்டபிரான் தேவர் மக்கள் மனைவி இரணியன் தேவர் மக்கள் மனைவி யிவர்கள் யாவரும் ஜலத்தில் வாரிக்கொண்டு போன படியினாலே நீர் நிர்கதியற்தும் நாதியற்றும் …… எங்களுடைய கூட்டத்தார் எங்களைத் தூற்றாமலிருக்கவும் இளையதாரத்து பிள்ளையான நீரே மேற்படி நஞ்சைநிலம் மேற்படி ஊர் மேற்படி கஸ்பா மேற்படி விலாஸத்திலிருப்பதை அனுபவ ஒத்தியலாக எடுத்து அனுபவித்துக் கொள்ளவும் இவை பௌத்திர பாரம்பரியமாக …. உமது சந்ததி….
……….
…….. சங்கரநமச்சிவாயத்தேவர்.. .{இதற்கு மேல் படிக்க இயலவில்லை } ..
இப்பத்திரத்தில் பல்வேறு வரலாற்றுத் தகவல்களும் உள்ளன. அவை ஸ்காட் துரை- சாணார் -மறவர் கலவரம் – வெள்ளப்பெருக்கு {ஜலத்தில் வாரிக்கொண்டு போன படியினாலே } – இது தாமிரபரணி வெள்ளமா ? அல்லது சிற்றாற்றின் வெள்ளப்பெருக்கா என்பது தெரியவில்லை.
சதுரகிரி, சுவாமி குழந்தையானந்தர் மடத்திற்கு, சிறுதேட்டு கிராமத்தை தானமாக வழங்கிய சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதத் தேவரின் செப்பேடு, அவரை ” உத்தம க்ஷத்திரியன்” ( க்ஷத்திரியரில் மேலானவன்) – என்று குறிப்பிடுகிறது.
மேலும் “ராச நச்சேத்திர சந்திரோதையன்”- என்றும் தெரிவிக்கிறது. இதற்கு நட்சத்திரங்களைப் போன்றிருக்கும் ராஜ கூட்டத்தில் ‘சந்திரன்’ போல உதயமானவன்,- என்பது பொருள்.
சிவகிரி ஜமீன்தார் அவர்களை மறவர்கள் என்று குறிப்பிட்ட பத்திர நகல்
சிவகிரி ஜமீன்தார்களை மறவர்கள் என்று குறிப்பிட்டுள்ள பத்திர நகல்.
கீழ் கண்ட பத்திர நகல் 1877 ஆகஸ்ட் மாதத்திய நகல் பத்திரம் ஆகும். இது திருநெல்வேலி மேடைத் தளவாய் முதலியார் வகையறாவில் வந்த, அழகப்ப முதலியார் மகன்கள், தளவாய் அ. திருமலையப்ப முதலியார் மற்றும் தீர்த்தாரப்ப முதலியார் ஆகிய இருவரும் சேர்ந்து குற்றாலத்தில் உள்ள குறிஞ்சி பங்களா மற்றும் தோட்டத்தை, சிவகிரி ஜமீன்தார் வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் மகன் சங்கிலி வீர பாண்டிய சின்னத்தம்பி -ஆகிய ” மறவர்களுக்கு” எழுதிக் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.
[ இரண்டாவது பக்கம் 5 வது வரிகள்]
இது கிரய ஒப்பந்தம் ( Endorsement ) காட்ட எடுக்கப்பட்ட நகல் ஆகும்.
குறிப்பு:
பதிவில் இது நகல் பத்திரம் என்று குறிப்பிட்டதைக் கவனிக்கவும். இது விற்பனை மற்றும் சரிபார்த்தலுக்காக பழைய மூலப் பத்திரத்தை கேட்டுப் பெறும் வகையில் வருவதும், மூலப் பத்திரம் எந்த வால்யூம் ல் எந்தெந்த பக்கங்களில் இருக்கின்றன என்பதையும், பவர் ஆஃப் அட்டர்னி யார் என்பதை தெரியப்படுத்துவனவுமாகும்.
அதன்படி மூலப்பத்திரம் 18 ம் தேதி ஆகஸ்ட் 1877 ல் எழுதப்பட்டுள்ளது. இது 24 வது வால்யூமில் 151,152 பக்கங்களில் 1355 நம்பர் தாஸ்தாவேஜாக பதியப்பட்டுள்ளது. அதன் தகவல்கள் கீழே உள்ளன. சரியாக முதலில் வாசித்த பிறகு கேள்வி கேளுங்கள் உடனே 20 ரூபாய் தற்காலத்து ஸ்டாம்ப் பேப்பர் என்று உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டாதீர்கள்.
அதனால இவங்களுக்கு புரிய வைக்கணும்னா நாமளே அந்தப் பத்திர நகலை வாசித்து வேறொரு பேப்பரில் எழுதி அதைப் புரியும்படி கொடுத்து விடுவோம் என்று முடிவு கட்டினேன். இப்பவாவது புரியுமா? இல்லை ட்யூப் லைட்ஸ் தானா?.. வர வர lkg வாத்தியார விட மோசமாப் போச்சு என் நிலமை! 😂
சிவகிரி – தலைவன் கோட்டை
சிவகிரி ஜமீன்தார் செந்தட்டிகாளைப் பாண்டிய சின்னத்தம்பியார் அவர்களின் குமாரரும் SK.வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் மற்றும்
SKN. ரவீந்திரநாத ராஜா அவர்களின் இளைய சகோதரருமான SK.ஜெகநாதராஜாவாகிய கண்ணராஜா சின்னத்தம்பியார் அவர்களுக்கும்,
தலைவன்கோட்டை ஜமீன்தார், இந்திரன் ராமசாமி ரகுநாத பாண்டியத் தலைவனார் அவர்களின் குமாரத்தியும், ராஜகுமார காசிநாத துரை அவர்களின் பேத்தியுமான, கோமதி சிவப்பிரியாநாச்சியார் அவர்களுக்கும் 15/12/88 அன்று சங்கரன்கோவில் அசெம்பிளி லாட்ஜ் கல்யாண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
16/12/88 அன்று, பாளையங்கோட்டை பெருமாள்புரம் கல்யாண மண்டபத்தில் வைத்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நெல்லை பிரபாகரனின் கச்சேரி நடைபெற்றுள்ளது.
அக் கால கட்டத்தில், நெல்லை பிரபாகரனின் கச்சேரிக்கு மிகுந்த புகழும், அதிக வரவேற்பும் இருந்தது.
சங்கரன்கோயில் ஆடித்தபசு தேவர் மண்டகப்படி திருநாளுக்கும், பைம்பொழில் தைப்பூசம் தேவர் மண்டகப்படி திருநாள்களுக்கும் இவரின் கச்சேரிகள் நடக்கும். எஸ்பி பாலசுப்பிரமணியம் குரலில் அருமையாகப் பாடுவார்.
இன்று எத்தனையோ ஆடலும் பாடலும் நிகழ்வுகள் – ஆர்க்கெஸ்ட்ரா குழுக்கள் வந்துவிட்டாலும் நெல்லை பிரபாகரனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
அப்படிப்பட்ட டிமாண்ட் ஆன நிலையில் இருந்த பிரபாகரன் கச்சேரி நமது ஜமீன்தார் கல்யாணத்திற்கு நடந்தது என்பது பெருமைக்குரியது.
மேற்கண்ட திருமணத் தம்பதியருக்கு பிறந்தவர்தான் நமது சிவகிரி இளைய ஜமீன்தாரவர்களான ஜெகநாத. ஹரிஹர ராஜா சின்னத்தம்பியார். அவர்கள்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அந்தக் கப்பல் பினாங்கை நோக்கி புறப்படத் தொடங்கியிருந்தது.. கடுமையான காயங்களோடு இருந்த பெரும்பாலானோருக்கு விழுப்புண் தந்த வலியைவிட மனப்புண் தந்த வலி சித்திரவதை செய்தது. போரில் இறக்காமல் இப்படி நாடு கடத்தப்பட்ட அரசியல் கைதிகள் ஆகிவிட்டோமே என்று ஒவ்வொருவரும் தம்மைத் தாமே எண்ணி நொந்தனர். கப்பலின் மேலடுக்கு கைதியாக இருந்த நான் இதையெல்லாம் பார்க்கச் சகிக்காமல் கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தேன், கப்பல் அலைகடலின் நடுவே கிழித்துக் கொண்டு முன்னேறிச் செல்லும் போது, என் நினைவுகள் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தன…
சக்கந்தியின் பாளையக்காரர்கள் பரம்பரையில் மூத்தவனாக வந்து, வேலுநாச்சியாரின் மருமகன் ஆன நாளில் இருந்து, எனது மாமனாரின் பள்ளிப்படை ஆலயத்திற்கு தான தர்மங்களைத் துவங்கி எத்தனையோ ஆலயங்களுக்கும், அன்னச் சத்திரங்களுக்கும், தனி நபர்களுக்கும், குடிமக்களுக்கும் அள்ளித் தந்த இந்த கரங்களில் இப்போது கனமான இரும்புச் சங்கிலிகள், .
காளையார் கோயில் காட்டில் மறைவிட முகாம் அமைத்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது சுற்றி வளைத்த பரங்கியர் கூட்டத்தின் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டு, ஆங்கிலேய நாடக நீதிமன்றத்தில் பெயரளவில் விசாரணை செய்யப்பட்டு, இதோ இப்போது நடுக்கடலில் சென்று கொண்டிருக்கிறேன்..
இங்கே காயம் தந்த வலி- மனவேதனையுடன் உள்ளக் குமுறலில் துடிக்கும் 71 அரசியல் கைதிகளும் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள். அவர்கள் இப்போது அவர்களுக்காக வருந்தவில்லை!.. அநாதைகள் ஆகிவிட்ட அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரை நினைத்தே தற்போது கலங்கிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். இதில் நானும் விதிவிலக்கல்ல!.. குடிமக்களின் துயரை நேரடியாக ஒரு மன்னன் காண்பது அந்தத் துயரிலும் மேலும் துயரமானது. இதோ இந்தக் கரங்களால் அதைத் துடைக்க முடியாதவாறு காப்பு இடப்பட்டுள்ளது. காப்பாற்ற இயலாத இந்தக் கரங்களுக்கு காப்பு எனும் அடிமைச் சங்கிலி சரியான தண்டனைதான்.
இதோ என்னோடு பிணைக்கப்பட்ட ராமநாதபுரம் ஜெகநாத ஐயன் தனது கை கால்களை அசைக்கக்கூடத் திராணியற்றவனாக இருக்கிறான். பாவம் அவன் உடம்பில் சவுக்கு இறங்காத இடம் பாக்கியில்லை!. பிறப்பால் அந்தணனாக இருந்தாலும் நெஞ்சளவில் மறவனாக இருக்கிறான். இத்தனை அடிகள் வாங்கியும் இன்னும் ஒரு முணுமுணுப்பு அவனிடமிருந்து எழவில்லை! என்பது ஆச்சரியமான விஷயம். எங்கள் 72 பேரையும் இரண்டிரண்டு நபர்களாகப் பிணைத்து, 36 பேர்களாக ஆங்கிலேயர்கள் மாற்றி இருந்தனர். இதற்கு காரணம் இரும்புச் சங்கிலியின் பற்றாக்குறை அல்ல!.. இருவராலும் இணைந்து ஓட முடியாது என்பதால் இருக்கும் என்று எண்ணுகிறேன். அதுவும் நான் இப்படி முரட்டு அடி வாங்கி பாதம் ஊன்ற முடியாமல் வீங்கிக் கிடக்கும் இந்த பார்ப்பனனை இழுத்துக் கொண்டு எப்படி ஓடுவது…
வங்கக் கடல் சூரியனை மெதுவாக உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது. மெதுவாக என் மீது பனிக்காற்று உரசத் துவங்கியிருந்தது… எனது கண்கள் அந்த ரவியின் ரத்தச் சிவப்பைக் கண்டபடியிருக்கிறது… மனமோ அதில் லயிக்காமல் என்னை மீண்டும் மீண்டும் பின்னுக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. நான் நினைத்துப் பார்க்க இங்கு இன்னும் என்ன இருக்கிறது?..
…ஆம் நான்தான் சக்கந்தியின் வேங்கன் பெரிய உடையாத் தேவனாகிய அரசு நிலையிட்ட விஜயரகுநாத பெரிய உடையாத்தேவன்
தொடரும்….
வாஜபேய யாகனாகிய நான்…2.
நான் என்ன குற்றம் செய்தேன்?..
என்னைப் பொம்மையாக பாவித்து பிறர் அரசாங்கம் செய்ய உடந்தையாக இருந்தேனா?..
என் மனைவியும் மக்களும் என்ன குற்றம் செய்தனர்?
வங்கக் கடலின் அலைகள் இவ்வளவு ஆக்ரோஷமாக இந்தக் கப்பலின் மீது மோதுகிறதே.. இதுபோல் இன்னும் பலமடங்கு வேகமெடுத்து இவைகள் அந்தப் பரங்கியர் பூமியை மூழ்கடிக்கக் கூடாதா?
இந்த நவாப் போல ஒரு கேடு கெட்டவன் இந்த உலகத்தில் வேறு எவனும் இருக்க முடியுமா? ச்சீ ச்சீ.. என்ன பிழைப்பு இதெல்லாம்.. அவன் தன் மானம், உடல், எல்லாவற்றையும் கேவலம் பணத்துக்காக பரங்கியிடம் போய் அடமானம் வைத்து விட்டான். அவன் என் சின்ன மாமன் சொன்னது போல மறைவிட மயிருக்குச் சமமானவன்தான்.
.. நான் ஏன் இவ்வளவு கொந்தளித்துக் கொண்டிருக்கிறேன்.. ? என்னவாயிற்று எனக்கு. .?. எப்பேர்ப்பட்ட துன்பங்களையும் தாக்குப்பிடிக்காதவன் எப்படி ஒரு நெஞ்சுரம் கொண்ட ஆண்மகனாக இருக்க முடியும்?
– திடீரென முதுகின் பின்புறத்தில் இருந்து ஒரு அசைவு, ஜெகநாத ஐயன் அரை மயக்க நிலையில் இருந்து இப்போது தெளிந்து கொண்டிருந்தான்.. ஒரு ப்ராஹ்மணன் கடல் தாண்டக் கூடாது என்பது அவனின் தர்மம். ஆனால் என்ன செய்ய,.. இவனின் விதி இப்போது மிலேச்சனின் கையில் அல்லவா இருக்கிறது!.
கப்பலின் கீழ்தளத்தில் சிலர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தனர். பாவம்,.. திருமயம் கோட்டையில் நாங்கள் சிறையில் இருந்தபோதே பலருக்கு மனநலம் மட்டுமல்ல, உடல் நலமும் கெட்டிருந்தது. அங்கு எங்களுக்கு சரியான குடிநீர் கூட தரவில்லை!. மற்றவர்களுக்கு எப்படியோ,. நான் சேரலாதன் இரும்பொறை போல மானத்தையே போர்த்திக் கொண்டு எதுவுமே வேண்டும் என்று கேட்டு வாங்கிடக் கூடாது என்பதில் திண்ணமாக இருக்க முடிவு செய்து கொண்டேன்.
ஜெகநாதன் இப்போது கண் விழித்து விட்டான். மங்கிய நிலவொளியில் எனது முகத்தை சில விநாடிகள் உற்றுப் பார்க்கிறான்… அவனது உதடுகள் மெதுவாக விரிந்து ஏதோ சொல்கின்றன.. நான் என்ன சொல்கிறான்?.. என்று யோசிக்கும் நேரத்தில் மீண்டும் அந்த காய்ந்து போன உதடுகளில் :மயிலப்பன்’ பேரை உச்சரித்தான்.. மயில்.. மயிலப்பன்… ஆமாம்.. அவன்தான் சித்திரங்குடி சேர்வைக்காரன் மயிலப்பன்..
அவனுக்கு என்ன?.. அவன் நலமாகத்தான் இருப்பான். அவனை இந்த பரங்கிகளால் அவ்வளவு சுலபமாகப் பிடித்து விட முடியாது!. இப்போதும் எங்கேயோ ஏதாவது ஒரு சாமியார் வேஷத்தில் எந்த மடத்திலாவது இந்த வெள்ளைப் பன்றிகளுக்கெதிராக சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பான். ஆனால்.. நாங்கள் நடத்திய கடைசிப் போரில் வந்து கலந்து கொள்ள அவனுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவன் தயாராக மறவ மங்கலத்தின் மேடான பகுதியில் நின்று கொண்டு, எங்களின் செங்காவி நிறத்தில் ஒரு புறம் மீனும் மறுபுறம் கருடனும் கொண்டு பறக்கும் கொடியை காளையார் கோயில் கோபுரத்தின் மீது ஏற்றியவுடன் தான் சேர்த்திருந்த படையுடன் புறப்படத் தயாராக இருந்தான். ஆனால் கொடியே ஏற வழியில்லை எனும்போது அவன் என்ன செய்ய முடியும்?. அந்தக் கொடியை ஏற்ற எத்தனிக்கும் போதுதான் வாணத்தேவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவன் சத்தமே இல்லாமல் கீழுள்ள கற்தரையில் விழுந்து சிதறியதை பார்த்தவர்கள் வந்து என்னிடம் சொன்னார்கள். மயிலப்பன் நான் அடிக்கடி தான தர்மம் செய்த சூடியூர் மடத்தில்தான் வேத சந்நியாசி போல வேஷம் போட்டுக் கொண்டு வேத விளக்கங்களை சொற்பொழிவாற்றிக் கொண்டும், பௌணிகரன் போல பிதற்றிக் கொண்டும் இந்த பரங்கிகளை ஏமாற்றிக் கொண்டு அங்கே தங்கியிருந்தான். இப்போது அவன் எங்கே இருப்பானோ தெரியவில்லை!.. அவன் புத்திமான் இவர்களிடம் லேசில் பிடிபட்டு விட மாட்டான். இந்த ராஜசிங்க மங்கலம் ஜெகநாதன் அவன் மீது கொள்ளைப் பிரியம் கொண்டவன் அதனால்தான் மயக்கம் தெளிந்ததும் அவன் பெயரைச் சொல்கிறான்..
என்ன ஜெகநாதா.. இப்பவும் உனக்கு மயிலப்பனைத் தேடுகிறதோ?.. அவனாவது நல்லாயிருக்கட்டும் என்றேன்.
ஜெகநாதன் சிறிது சப்தமாக நான் மயிலப்பனைப் பார்த்தேன்.. என்றான். நான் சட்டென அவன் வாயைப் பொத்தினேன்.
நம்மைச் சுற்றி இருபது பேர், நாம் ஆயுத முனையில் கடுங்காவலில் இருப்பதை மறந்து விடாதே ஜெகநாதா.. மயிலப்பன் இருக்கும் இடம் தெரியாமல்தான் இவர்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். நீயே ஏதாவது பேசி அவனை இவர்கள் நெருங்கிட வைத்திடாதே என்று அவன் காதோரம் மெல்லிய குரலில் சொன்னேன்…
ஜெகநாதன் சுற்றிலும் கண்ணைச் சுழல விட்டான். மெதுவாக ஏதோ கூற விரும்பினான். நான் வேண்டாம் என்பதை கண்ணசைவில் தெரிவித்தேன். ஜெகநாதன் என் மடியில் படுத்தவாறே மௌனியானான்.
ஜெகநாதன் என்ன சொல்ல வருகிறான்… நான் குழம்பினேன். அது எதுவாக இருந்தாலும் இந்த சமயம் அதற்கு ஏற்ற நேரமல்ல!.. இவர்கள் உணவருந்தவோ அல்லது வேறு காரணங்களிலோ கீழே செல்லும் நேரத்தில் கேட்கலாம். அதுவரை பொறுமையாக இருப்போம் என்று முடிவு செய்தேன்.
அதே நேரம் கீழே ஒரு அலறல் சத்தத்தை கேட்க நேர்ந்தது…. அது பொம்மைய நாயக்கனின் குரல். அவன்தான் வாராப்பூர் பாளையக்காரனான பொம்மைய நாயக்கன்.. அவனுக்கு என்ன நடக்கிறது?…..
தொடரும்..
All reactions:
நான் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் ” வாஜபேய யாகன் ஆகிய நான்” எனும் உண்மைச் சரித்திரத் தொடர் யாருடைய நாவல் தழுவலும் அல்ல!.. என்பதையும், இது முழுக்க முழுக்க நான் இதுவரை வாசித்த – அறிந்த தரவுகள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் என்னால் சொந்தமாக எழுதப்பட்டு வருகிறது என்பதையும் வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவை பல மூலத் தரவுகளில் இருந்து திரட்டப்பட்டு வேங்கன் பெரிய உடையணத் தேவர் சொல்வது போல என்னால் புதிதாகப் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சரித்திரச் சித்திரம் என்பதையும் அறிவிக்கிறேன். நன்றி!
இதை வாசிக்கும் அறிஞர் பெருமக்கள் குறையைச் சுட்டி, நிறையைத் தருமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
மற மன்னர்கட்கு தங்கப் பூணூல் என்பது வழக்கத்தில் உண்டு. மேலும் மறக்குல மன்னர்கள் வெறும் பருத்தி நூலில் பூணூல் போடுவதில்லை என்பதால்.. அறியாத சிலர் மறக்குல மன்னர்களுக்கு பூணூல் இல்லை என்று எழுதினர். ஆனால்.. தங்கத்திலும், தங்க இழைகளில் கோர்த்த முத்துக்களிலும் மன்னர்கள் பூணூல் அணிந்திருந்தனர். {ஏற்கனவே வடகரை மன்னர்கள் இருவர் முத்துப் பூணூல் கோலத்துடன் குற்றாலம் கோயிலில் உள்ள படங்கள் பதியப்பட்டுள்ளது}
ஏன் இம் மன்னர்கள் தங்கத்திலும், முத்துச் சரங்களிலும் பூணூல் பூண்டனர்? -எனும் கேள்விக்குப் பதில் இதுதான்…
தங்கத்திற்கும், பரிசுத்தமான முத்துக்கும் தீட்டு என்பது இல்லை. தாம்பத்ய உறவு, அந்தப்புற சங்கதிகளின் போதும் இவற்றுக்குத் தீட்டு இல்லை என்பதுதான் பருத்தி நூலை விடுத்து, இவற்றை ராஜாக்கள் அணியக் காரணம். இவை விண்ணுலகத் தேவருக்கும் மண்ணுலகத் தேவருக்கும் பொதுவான பூணூல் அணிகள். இவற்றை உடைக்கு மேலும் அணியலாம், வெற்றுடம்பிலும் அணியலாம்.
வன்னி -வன்னியன் – வன்னியனார் எனும் பெயர்ச்சொல், சாசனங்கள் – இலக்கியங்கள் – பத்திரங்கள் ஆகியவற்றில் பயின்று வந்துவிட்டாலே சிற்றறிவு உள்ள மூடர்களில் இருந்து கற்றறிந்த சில பேரறிஞர் வரை சட்டென்று உடனடியாக தற்கால வன்னியர் சாதியைக் குறித்துதான் அது என்று கையைக் காட்டுகின்றனர். எதையும் சரியாக ஆராயாமல் முடிவெடுக்கும் இவர்களால்தான் சரியான சமூக வரலாறு மக்களுக்கு கிடைப்பதில் பெருந் தடை ஏற்படுகிறது.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மறவரின் அடிமடியிலேயே கை வைக்கும் போக்குகள்தான் தற்காலத்தில் இணையதள வரலாறு பேசும் முட்டாள்களின் கை வண்ணமாக திகழ்ந்து வருகிறது.
மற மன்னர்கட்கு தங்கப் பூணூல் என்பது வழக்கத்தில் உண்டு. மேலும் மறக்குல மன்னர்கள் வெறும் பருத்தி நூலில் பூணூல் போடுவதில்லை என்பதால்.. அறியாத சிலர் மறக்குல மன்னர்களுக்கு பூணூல் இல்லை என்று எழுதினர். ஆனால்.. தங்கத்திலும், தங்க இழைகளில் கோர்த்த முத்துக்களிலும் மன்னர்கள் பூணூல் அணிந்திருந்தனர். {ஏற்கனவே வடகரை மன்னர்கள் இருவர் முத்துப் பூணூல் கோலத்துடன் குற்றாலம் கோயிலில் உள்ள படங்கள் பதியப்பட்டுள்ளது}
ஏன் இம் மன்னர்கள் தங்கத்திலும், முத்துச் சரங்களிலும் பூணூல் பூண்டனர்? -எனும் கேள்விக்குப் பதில் இதுதான்…
தங்கத்திற்கும், பரிசுத்தமான முத்துக்கும் தீட்டு என்பது இல்லை. தாம்பத்ய உறவு, அந்தப்புற சங்கதிகளின் போதும் இவற்றுக்குத் தீட்டு இல்லை என்பதுதான் பருத்தி நூலை விடுத்து, இவற்றை ராஜாக்கள் அணியக் காரணம். இவை விண்ணுலகத் தேவருக்கும் மண்ணுலகத் தேவருக்கும் பொதுவான பூணூல் அணிகள். இவற்றை உடைக்கு மேலும் அணியலாம், வெற்றுடம்பிலும் அணியலாம்.
தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை மற்றும் பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் மூலமாக ஐயா சொ.சாந்தலிங்கம் அவர்கள் 450 க்கும் மேற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகளை படி எடுத்து, வாசித்து, அவற்றை நூலாக்கம் செய்யும் பணி நிறைவுறும் தருவாயில் உள்ளது. இந் நிலையில், மதுரைக் கோயிலின் 80 க்கும் மேற்பட்ட சாசனங்கள் ஏற்கனவே தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலமாக வெளியிடப்பட்டது. அவற்றில் மதுரையின் நிலவுடைமைச் சமூகமாக மறவர்கள் அறியப்பட்ட தகவல்களைச் சில சாசனங்கள் கூறுவதை இங்கு நான் தருகிறேன்.
புதுக்கோட்டைப் பகுதியின் நாட்டார் அமைப்பைத் தொகுத்துக் கூறும் முன்பாக இப்பகுதிக் கல்வெட்டுகள் சிலவற்றில், நாட்டாருடன் நகரங்களும், கிராமங்களும் அல்லது பிரமதேயங்களும் {…”நாடுகளோம் நகரங்களோமும் கிராமங்களோம பிரம்மதேயமுங்களோம்”..} என தனியே கூறப்படுவதற்கு விளக்கம் என்னவென்று பார்ப்போம். முதலில் “கிராமங்களோம்” என வருவதைக் கவனிப்போம், இன்றைய நாளில், கிராமம் என வரும் சொல் ஊர்க்குடியிருப்பைக் காட்டும். அவ்வாறாயின் ஊர்க்குடியிருப்பின் பிரதிநிதிகளே , அதாவது ‘ஊரவரே’ நாட்டாராக இடம் பெற்றனர் எனும் கருத்தினைக் கவனத்தில் கொண்டால், கிராமம் அல்லது ஊரின் பிரதிநிதிகள் நாட்டார் அவையில் இடம்பெறவில்லை என்று கூற வேண்டியமை வரும். எனவே கிராமம் எனும் சொல்லிற்கு இன்று வழங்கப்படும் சொல் இங்கு பொருத்தமற்றதாகும். பிரமதேயக் குடியிருப்புகள் நாட்டார் அவையின் ஒருமித்த இயல்பிற்குப் பொருத்தமற்ற நிலையில், பிராமணர்களின் பிரதிநிதிகள் நாட்டார் அவையில் தனியே இடம்பெற்றனர் எனக் கொள்வது ஏற்கத்தக்கது என்றால், இங்கு கூறப்படும் கிராமங்கள் பிரமதேயக்குடியிருப்புகளே எனக் கொள்வதில் தவறில்லை!, கிராமம் எனும் சொல்லிற்குப் பதிலாக பிரமதேயம் என கூறப்படுவது {IPS: 196 “அகர பிரம்மதேயங்களும்” } கிராமங்கள் பிரமதேயங்களே எனும் கருத்தை உறுதிசெய்யும்.
You must be logged in to post a comment.