நாடு பிடித்தவர்களும் மறவரும்

அழகர் கோயில் வைஷ்ணவர்களுக்கும், ஆலயப் பணியாளர்களுக்கும் பிரசாத கட்டளைக்காக, மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (13ம் நூற்றாண்டு) ‘நாடு பிடித்தவர்களும் மறவரும்’ போர் செய்து கைப்பற்றிய நிலம் (…வன் பற்றாய் பற்றின நிலமும்…) வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் எனும் பிரமதேயத்துடன் இணைத்து இறையிலி நீக்கி தேவதானமாக வழங்கப் பட்டதைக் கூறுகிறது.

.

1010

Like

Comment

மதிப்பனூர் மறவர் நடுகற்கள்.

மதிப்பனூர் மறவர் நடுகற்கள்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள மதிப்பனூர் எனும் ஊரில் பெருமாள் கோயில் அருகில் ஆறு நடுகற்களில் ஒன்றாக இந் நடுகல்லும் உள்ளது. இவர்கள் அறுவரில் ஐவர் ஒரே ஊரினர் என்பதும், ஒருவர் பூங்கா நாட்டின் கடக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதும் செய்தியில் தெரிகிறது.

1. ஸ்ரீ குடி

2.காட்டு நா-

3.ட்டு இ-

4.டை ஆற்-

5.றூர் பால்

7. வழுதி கு-

8. ளத்து ம-

9.றவன் பெற்-

10. றானுக்கு.‌

என ஆவணம் 31, 2020 – பக்: 51 ல் பதிவிடப்பட்டுள்ளது. பதிவிட்ட நடுகல் படியைப் படத்தில் உள்ளது படி வாசிக்க ‘மறவன் பேரயன் பெற்றானுக்கு’ என்றுள்ளது. ( திருத்தம் மேற் கொள்ள வேண்டும்)

Continue reading “மதிப்பனூர் மறவர் நடுகற்கள்.”

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயில்

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயில் திருவிழா நாட்களில், முதல்நாள்- நாற்பத்தெண்ணாயிரப்பெருந்தெரு [பெரு?]ங்குடி ஊரவர்களுக்கும், இரண்டாம் திருநாள்- இளம்பிறைக்குடி ஊரவருக்கும், மூன்று மற்றும் நான்காம் திருநாட்கள்- புது[க்கை?] அரைய மக்களுக்கும், ஐந்தாம் திருநாள்- சிங்கமங்கலம் அரைய மக்களுக்கும், ஆறாம் திருநாள்- சிங்கமங்கலத்தைச் சேர்ந்த இளநாட்டார் மற்றும் புதுக்கோட்டை இளநாட்டாருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டதாக இந்த சாசனம் தெரிவிக்கிறது. இவை இன்றைய நாளில் ஆலயங்களில் நடத்தப்படும் மண்டகப்படித் திருநாட்கள் போன்றவையாகும். இதன் காலம் 13 ம் நூற்றாண்டாக இந்த நூல் விபரக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்தக் காலம் தவறாகக் குறிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில்,.. இந்த காலகட்டத்தில் புதுக்கோட்டை எனும் பெயர் கொண்ட நகரம் இருந்ததா? என்பது ஒரு கேள்வி!. மேலும் கலசமங்கலம்- சிங்கமங்கலம் எனும் இரு அழிந்துபட்ட ஊர்களை இணைத்து புதுக்கோட்டை நகரை பின்னாளில் தொண்டைமான்கள் கட்டி எழுப்பினர் எனும் செய்தியை இந்த சாசனம் கொண்டு மறுக்கலாம் என்பதையும் அறிய வேண்டும். காரணம் இதே சாசனத்தில் சிங்கமங்கலம் மற்றும் புதுக்கோட்டை என இரு ஊர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சாசனத்தில் வரும் ஊரார்கள் என்பது ஊரவரான ஊர்ச் சபையினரையும், அரைய மக்கள் என்பது அரையர்களின் வம்சாவழியினரான அரசு மக்களையும், இளநாட்டார் என்பது இளமக்களில் நாட்டார் அந்தஸ்தை பெற்றிருந்தவர்களையும் குறிக்கும். புதுக்கோட்டை பகுதியின் அரசுமக்களாக- இளநாட்டார்களாக- ஊரவராக அறியப்பட்டவர்கள் யாவரும் தேவமார்கள் என்பது பல்வேறு வகையான சான்றுகள் மூலம் ஏற்கனவே அறியப்பட்ட செய்தியாகும்.

May be an image of text that says '21 கவத்தலைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை 22 த்து வாய்க்கு தெற்கும் ஆக வரை 9:4 இடம்: புதுக்கோட்டை ஸ்ரீசாந்தனாத சுவாமி கோயில். காலம்: சுமார் 13ஆம் நூற்றாண்டு. செய்தி: இக்கோயில் திருநாவுக்கரசர் திருநாளினை நாற்பத்தெண்ணாயிரப் பெருந்தெரு என்ற வணிக மையம் கொண்ட ஊர் முறைப்படி விழாவாகக் கொண்டாடியது. கோயில் திருவிழா நாட்கள் அரசு மக்கள், இளநாட்டார், ஊரார் இடையே பகிர்ந்து நடத்தப்பட்டமை. 1 2 3 ஸ்வஸ்திஸ்ரீ, உடையார் குலோத்துங்க சோளிச்சரமுடைய நாயனார் திருநாள் முறை திருக்கோடி சற்று கோயில் பெருமாள் .திருநாட்டுப் பூசைய் முறை திருநாவுக்கரைசள் திருநாள் னாற்பத்தெண்ணாஇரப் பெருந்தெரு ஊர் முறை ங்குடி ஊர் முறை இரண்டாம் திருநாள் இளம்பிறைகுடி ஊரா முறை முன்றாம் திருநாளும் நாலாந் திருநாளும் புது ..அரைய மக்கள் முறை ஐந்தாம் திருநாள் சிங்க மங்கலத்து ஊர் அரைய மக்கள் முறை ஆறாம் திருநாள் சிங்கமங்கலத்து இளநாட்டாரும் புதுக்கோட்டை இனநாட்டாரும் முறை 5'

மீனாட்சித் தேவன் கோத்திரம்

மீனாட்சித் தேவன் கோத்திரம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~

மறமன்னராகிய சேதுகாவலர் மீனாட்சித் தேவன் கோத்திரமாகிய பழனி அம்பலக்காரன் மகன் ராமசாமி அம்பலக்காரன் என்பவர் பொன்னமராவதியில் அமைந்துள்ள சோழேஸ்வரமுடையார் கோயிலுக்கு முன்பாக 12 கால்களுடனும், மேற்கூரையுடனும் மண்டபம் கட்டிக் கொடுத்ததை இந்த சாசனம் பகிர்கிறது.

இந்த சாசனம் “மீனாட்சித் தேவன் கோத்திரம்” எனும் ஒரு கோத்திர முறை மறவருக்கு இருந்ததை அறியச் செய்கிறது. மறவர்களை மீனாக்ஷி தனது விலாப் புறத்திலிருந்து தோற்றுவித்தாள் என்றும், தெய்வப் பிறவி என்பதால் தேவன் என்றும் அவர்களுக்கு பெயர் சூட்டினாள் என்பதும் ஒரு புராணச் செய்தியாகும். அதன் காரணம் பற்றியே இந்தக் கோத்திரம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

May be an image of ‎text that says '‎காலம்: கி.பி. கி.பி.1890. 1890. செய்தி: பன்னிரண்டு கால் வெளிமண்டபத்தை பொன்னமராபதி இராமசாமி அம்பலகாரர் செய்ததையும், தளவரிசையை அவ்வூர் நகர்த்தார் செய்ததையும் தெரிவிக்கிறது. 1 2 3 சாலி வாக ன சகாப்த் தம் 18 12 12 க்கு மே ல் செல்லா நின்றன வி றோதி [கிருது] வருடம் ஆவணி 12 மறமன் 10 னறாகிய சே காவலர் சித் தேவ கோத்திரமா கிய .اف பளனி 14 26 ஆவணம் 13, 2002 15 யப்பனம்ப 16 லகாரன் மகன் 17 ராமசாமி அம் 18 பலகாரன் 19 பான்னமறா 20 சோழேஷ்ப 21 ரமுடையார் ம 22 ன்னாக 12 23 ல் தார்சு மண் 24 டபம் உபயம் 25 சோழேச்வர 26 முடையார் 27 துணை 28 யிது கழ் 29 தளவரி சை இவ்ல 31 நகர 32 த்தார்‎'‎

திருச்சிராப்பள்ளி மறவருக்கு

பிரிட்டிஷ் படையில் கர்னலாக இருந்த காஸ்பி எனும் ஆங்கிலேயர் தான் இந்தியாவில் (பொ.யு.1767 ல் இருந்து 1778 வரை ) பங்கேற்ற போர்களில் நடந்த நிகழ்வுகளை லண்டனில் குறிப்புரைகளாக எழுதிவைத்துச் சென்றுள்ளார். இதில் நமக்கு என்ன பயன்? என்கிறீர்களா?

அவர் ‘திருச்சிராப்பள்ளி மறவருக்கு’ எதிராக பொ.யு.1772ல் தாம் போரிட்ட நிகழ்வையும் எழுதி வைத்துச் சென்றுள்ளார்.

19ம் நூற்றாண்டில் சாதிய எழுச்சிகள்• 1

கம்பன் எழுதியதா சிலை எழுபது?வன்னிய புராணத்தின் பழமை என்ன? எனும் கேள்விகளுக்கு விடைகளைத் தேடுவதுதான் இப் பதிவின் சாராம்சம்.கம்பரால் எழுதப்பட்டது என்று 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலக்கிய உலகில் அறிமுகம் ஆனதுதான் சிலை எழுபது. இது ஒரு கையெழுத்துப் பிரதியாக இருந்தது. இந்தப் பிரதியில் ஆசிரிய விருத்தம் என்ற வகையிலான எழுபது சரணங்கள் உள்ளன; இக் கையெழுத்துப் பிரதி கம்பரால் எழுதப்பட்டது என்று அந்தப் பிரதியின் முன் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. வன்னியரின் வீரத்தைக் குறிப்பதுதான் இப் பிரதியின் சாராம்சம்.வன்னியர்கள், அக்னிகுலம் (அல்லது நெருப்பு இனம்) சேர்ந்தவர்கள், சம்பு முனிவரிடமிருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சிலை எழுபது என்பதின் பொருள் வில்+அம்பு பற்றிய புகழைக் கூறும் எழுபது பாடல்கள் என்பது அதன் உள்ளர்த்தமாகும். இந்த வில்லும் அம்பும் உபயோகிப்பதில் வன்னியர் திறமைசாலிகள் என்று இந் நூலில் பாராட்டப்பெறுகின்றனர். நிற்க; .கருத்து .1.கையெழுத்துப் பிரதி சமீபத்தில் நகலெடுக்கப்பட்டது மற்றும் மிகவும் நல்ல நிலையில் உள்ளது.2.இந்த புத்தகம் கம்பனின் பாணியை ஒத்திருக்கவில்லை என்று ஒரு திறமையான நீதிபதியால் பிரிட்டிஷாரிடம் சொல்லப்பட்டது.3. இது மிகவும் பிற்காலத்தில் கம்பரின் பெயரைப் பயன்படுத்தி, முகவரியற்ற ஒருவரால் எழுதப்பட்டுள்ளது.•மக்கள் தொகை கணக்கெடுப்பில் அதிர்ச்சியான பிரிட்டிஷார்•பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பிரிட்டிஷ் காலனித்துவ அரசு, தாம் ஆளும் காலனித்துவ நாடுகளைப் பற்றிய முறையான அறிவுச் சார்பான செய்திகளைச் சேகரித்து ஒழுங்கமைக்க எண்ணி, சில நடவடிக்கைகளை முன்னெடுத்தது.இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஏற்பட்ட1857-1858 களில் இருந்து மேற்கண்ட இம் முயற்சிகளை அது துவக்கியிருந்தது. 1871 இன் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பானது இந்தியர்களின் சாதிவழியிலான அந்தஸ்து, தர வரிசைகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது – என பெர்னார்ட் கோன் குறிப்பிட்டுள்ளார். மேலும்,”1880 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்ட இந்திய சாதி அமைப்பு பற்றிய அடிப்படைக் கட்டுரைகளில் பெரும்பாலானவை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர்களாக முக்கியமான பதவிகளில் இருந்தவர்களால் எழுதப்பட்டவை”.- என்றும் தகவல்கள் சொல்கின்றன. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பானது பல்வேறு சாதிகளில் வளர்ந்து வந்த நவீன அறிவுஜீவிகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உண்மையில் இந்த கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இந் நாட்டிலுள்ள மனித சக்தியின் அளவை அறிவதற்கே பயன்படுவதற்காக எடுக்கப்பட்டது.ஆனால் கணக்கெடுப்பில், இன்ன ஜாதியினர் என்று கூறியவர்களால் சொந்த சாதியின் மேனிலையாக்கங்களுக்காக சொல்லப்பட்ட கதைகளும், புதிதாக உருவாக்கப்பட்ட சாதிப்பெயர்களும், சாதிகளின் தர வரிசைப் பட்டியல்களும் (ஹெர்பர்ட் ஹோப் ரிஸ்லியின் வார்த்தைகளில் சொன்னால் சமூக முன்னுரிமை) வளர்ந்து வந்த மேற்கத்திய நாட்டு கல்வியறிவு பெற்ற உயரடுக்கினரிடையே கூட மிகவும் பரபரப்புகளை ஏற்படுத்தியது.•பல்வேறு மேல்நிலையாக்கத்தை நோக்கி நடந்த சாதிகள்•வன்னியர்கள் மற்றும் நாடார்களின் விஷயத்தில், இருவரும் முறையே பள்ளிகள் மற்றும் சாணர்கள் என்பதிலிருந்து மேம்பட்ட சமூக மேல்நிலைப் பெயர்களை நோக்கிப் போட்டியிட்டனர்.முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, ​​வன்னியர்கள் வித்தியாசமான பெயரிடுதல் மற்றும் அவர்களின் விருப்பப்படி ஒரு மேல்நோக்கிய தரவரிசைக்கு உரிமை கோருவதற்காக ஜாதிசங்கீரசாரணம் எனும் நூலை உருவாக்கினர்.நாடார்களும் மேற்கண்ட இதே வழியைப் பின்பற்றி மேல்நிலையாக்கத்திற்காக மோதினர். இவ்வளவு காலமும் இல்லாமல் திடீரென 1921ல் இவர்கள் நடந்து கொண்ட விதம் ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் இத்தகைய சாதிகளின் வரலாற்றையே கேட்பதுமில்லை, அவர்கள் கூறும் புதிய பெயர்களைப் பதிவதுமில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.(காலனித்துவ தென்னிந்தியாவில் சடங்கு, சாதி மற்றும் மதம்மைக்கேல் பெர்குண்டர், ஹெய்கோ ஃப்ரீஸ்)பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அவற்றைத் தொகுத்த ஜாதி வரலாற்றாசிரியர்களால் கூறப்பட்ட கதைகள் மிகவும் நகைச்சுவையாக இருந்தன, வெளிப்படையாகவே நீண்ட காலமாக தொலைந்துபோனதாகக் கருதப்பட்டவை மற்றும் சிதைந்த நிலையில் இருந்த கையெழுத்துப் பிரதிகள் எங்கும் வெளியே கொண்டுவரப்பட்டு அல்லது இழுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.•வன்னிய புராணம் எழுதிய ஆண்டு 1934•சில சாதிக் குழுக்கள் சாதிப் புராணங்களை எழுதுவதற்கு வெளிப்படையாகவே கட்டளையிட்டன. அதன்படி 1934 ஆம் ஆண்டு அ.சுப்பிரமணிய நாயகரால் வெளியிடப்பட்ட வன்னிய புராணம் பதிப்பு இதற்கு சிறந்த உதாரணமாகும். சாதிய வரலாறுகளின் மீதான அறிவார்ந்த அடித்தளம் மற்றும் சர்ச்சைகளுக்குள்ளாகும் ஆதாரங்கள், அவற்றின் அதிகாரங்கள், சாதிய அறிவுரைகள், சாதிக்கான நடத்தை நெறிமுறைகள் ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி காலனித்துவ வாதங்களிலும் சமரசங்களுக்கு மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கட்டுரையில் ஆவணப்படுத்தப்பட்ட மற்றும் பகுப்பாய்வு செய்யப்பட்ட விவாதங்கள், பிரிட்டிஷ் அரசு காலத் தமிழ் சமூகத்தில் சாதி அந்தஸ்து மற்றும் தரவரிசையை மறு நிர்ணயம் செய்வதற்கான, பேச்சுவார்த்தைகள் மற்றும் போராட்டங்களின் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்சுகின்றன.ஜாதிய நடவடிக்கைகள் பழங்குடித் தன்மையிலிருந்து விடுபட்டு, வைதீக முறையிலும் சமஸ்கிருதமயமாக்கலிலும் மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதைப் போல மேல்நிலையாக்கமாகிய தொடக்கப்புள்ளியை நோக்கிப் பயணிப்பதாக அமைந்தன. இது அவர்களை இதுவரைத் தங்களுக்கு நெருக்கமாகப் படிநிலையில் உள்ள பக்கத்து சாதியினரிடமிருந்து பிரித்ததைத் தவிர வேறெந்தப் பயனையும் தரவில்லை. References.1. The Madras Journal of Literature and Science. Vol.8.2. Ritual, Caste, and Religion in Colonial South India.

அடுத்த பதிவில் மீண்டும் ஒரு சாதிய எழுச்சியைக் காண்போம்.

நன்றி!

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

தமிழ் காக்க புறப்பட்ட சூரியன்

தமிழ் காக்க புறப்பட்ட சூரியன்°

•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே, …

கம்பரையும், வள்ளுவரையும்

படிப்பார் யாருமில்லையா ?

என மூவேந்தர்களுக்குப்பிறகு தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பே இல்லாமல், 1381 ஆண்டுகள் கடந்தன. இதன் விளைவு, தமிழ் மொழியின் வளமும், பொலிவும் குன்றத் தொடங்கியது. வட மொழி வளரத் தொடங்கியது. தமிழும் வடமொழிச் சொற்களும் கலந்து பேசும் மணிப் பிரவாள நடையே பேச்சு மொழியாக மாறியது. மெத்தப் படித்தவர்கள் கூட தமிழுடன் வடமொழியினையும் கலந்து பேசுவதையே பெருமையாக எண்ணிப் போற்றிய காலம் அது.

அக்காலத்தே, தமிழின் தலையெழுத்தை மாற்ற ஒருவர் தோன்றினார். அவர்தான் சேது நாட்டு செம்பியர் குடித்தோன்றல் பாலவநத்தத்தின் அரசர் “வள்ளல் பாண்டித்துரைத் தேவராவார்.”…

மதுரைத் தமிழ்ச் சங்கம்!

×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் வளர்க்க புறப்பட்ட புயல் அரசர் பாண்டித் துரைத் தேவரவர்கள், தமிழை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர். கவி புனையும் ஆற்றல் படைத்தவர். கம்பராமாயணம், காஞ்சி புராணம், தனிகை புராணம் முதலான புராணங்களையும், சைவ சமய நூல்களையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்.

1901 ஆம் ஆண்டில் பாண்டித் துரை தேவர் அவர்கள் மதுரையில் சில காலம் தங்கியிருந்தார். சொற்பொழிவாற்றுவதில் மிகுந்த வல்லமை படைத்த பாண்டித் துரை தேவரின், சொற்பொழிவினைக் கேட்க மதுரை மக்கள் விரும்பினர். தேவரும் சொற்பொழிவாற்ற இசைந்தார்.

பாண்டித் துரை தேவர் அவர்கள், தனது சொற்பொழிவின் போது, கம்பராமாயணத்தில் இருந்தும், திருக்குறளில் இருந்தும், சில பாடல்களை மேற்கோள் காட்டிப் பேச விரும்பினார். இராமாநாத புரத்திலிருந்து மதுரைக்கு வரும்பொழுது, நூல்கள் எதனையும் எடுத்துவராத காரணத்தால், மதுரையில் உள்ளவர்களிடமிருந்து, இவ்விரண்டு நூல்களையும் பெற்று வருமாறு, தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

உதவியாளர்கள் பல நாட்கள் முயன்றனர். பலரிடமும் கேட்டனர். ஆனால் இல்லை, இல்லை என்ற பதிலே கிடைத்தது. ஒருவரிடம் கூட இந்நூல்கள் இல்லை. பாண்டித்துரை தேவரின் நெஞ்சம் கலங்கியது சங்கம் வைத்துத் .தமிழ் வளர்த்த மதுரையில் கம்பரையும், வள்ளுவரையும் படிப்பார் யாருமில்லையா என மனம் குமுறினார்.

இம்மாபெரும் குறையினைப் போக்க, தமிழினைக் காக்க, வளர்க்க ஏதாவது செய்தே ஆக வேண்டும் . இந்த இழி நிலையினை மாற்றியே தீர வேண்டும் என அன்றே உறுதியெடுத்தார்.

இதன் விளைவாக, பாண்டித் துரை தேவர் அவர்களின் பெரும் முயற்சியினால், 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14 ஆம் நாளன்று, மதுரைத் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது. தமிழ் மக்களிடையே தமிழுணர்ச்சிப் பரவ, இச்சங்கம் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்.

மதுரைத் தமிழ்ச் சங்கமானது, பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என மூன்றுத் தேர்வுகளை நடத்தி, தமிழாய்ந்த புலவர்களை உருவாக்கத் தொடங்கியது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மகத்தான பணி தமிழ் நாடெங்கும் பரவத் தொடங்கியது. தமிழகத்தின் அனைத்துப் பகுதியினரிடமும் தமிழ் உணர்ச்சியைத் தழைக்கச் செய்தது. இதன் பயனாக ஒவ்வொரு ஊரிலும், தமிழ்ச் சங்கங்கள் தோன்றலாயின. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவானது, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடப் பட்டது.

தஞ்சைத் தமிழ்ச் சங்கம்

×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா, தஞ்சை நகரில் சிறப்புறக் கொண்டாடப் பெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழன்பர்கள் பலருக்கும் ஓர் எண்ணம் தோன்றியது. தஞ்சையில் ஓர் தமிழ்ச் சங்கம் தொடங்கினால் என்ன? என்பதே அவ்வெண்ணமாகும்.

இதன் பயனாக “•பாப்பாநாடு ஜமீன்தார் சாமிநாத விசய தேவர்”•அவர்களைத் தலைவராகவும், இராசம் அய்யங்கார் அவர்களைத் அமைச்சராகவும், பண்டித உலகநாத பிள்ளை முதலானோரை உறுப்பினர்களாகக் கொண்டு “தஞ்சைத் தமிழ்ச் சங்கம்” தொடங்கப் பெற்றது. இச்சங்கத்தின் சார்பில் தமிழகம் என்னும் இதழும் வெளியிடப் பெற்றது.

அனால் இச்சங்கம் நீடித்து நிலைக்கவில்லை. தோன்றிய சில ஆண்டுகளிலேயே மறைந்து போயிற்று. தஞ்சைத் தமிழ்ச் சங்கம் மறைந்தாலும், தஞ்சை வாழ் மனதில் தமிழ்ச் சங்கம் பற்றிய ஏக்கம் இருந்து கொண்டேயிருந்தது.

வித்தியா நிகேதனம்

×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×

தஞ்சை தூய பேதுரு கல்லூரியில் விசுவலிங்கம் பிள்ளை என்பார் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். அவருடைய மகன் புலவர் வி. சாமிநாத பிள்ளை என்பவராவார். இவரும், தமிழ் இலக்கண இலக்கியங்களில் பெரும் புலமை பெற்று விளங்கிய, இலக்கணக் கடல் அரசஞ் சண்முகநாரும் நெருங்கிய நண்பர்கள்.

1909 ஆம் ஆண்டு வாக்கில் அரசஞ் சண்முகனார், தனது தொல்காப்பிய பாயிரவிருத்தி என்னும் நூலை அச்சிடும் பொருட்டு, சில காலம் தஞ்சையில் தங்கியிருந்தார். அவ்வமயம் அரசஞ் சண்முகனாரின் தூண்டுதலினாலும், புலவர் சாமிநாத பிள்ளை போன்றோரின் முயற்சியினாலும், ஒரு தமிழ்ச் சங்கம் தோற்றம் கண்டது.

கவி இரவீந்திர நாத் தாகூர் அவர்களின் சாந்தி நிகேதனத்தின் புகழ் பரவத் தொடங்கிய காலம் அது. எனவே சாந்தி நிகேதனம் என்னும் பெயரைப் பின்பற்றி, இச்சங்கத்திற்கு வித்தியா நிகேதனம் என்று பெயர் சூட்டப் பட்டது. கரந்தை, வடவாற்றங்கரையில் அமைந்திருந்த பஞ்சநத பாவா மடத்தில் வித்தியா நிகேதனம் தொடங்கப் பெற்று, செயல்படத் தொடங்கியது.

அரசஞ் சண்முகநாரின் நண்பரும், தமிழ், ஆங்கிலம், வட மொழிகளில் சிறப்புற பயின்று, இம்மொழிகளை ஆராய்வதையே பொழுது போக்காகவும், விளையாட்டாகவும் மேற்கொண்டிருந்த, அரித்துவார மங்கலம் பெருநிலக் கிழாரும், பெரும் வள்ளலுமாகிய “•வா.கோபால சாமி இரகுநாத இராசாளியார்”• அவர்களே இச்சங்கத்தின் தலைவராவார். வி. சாமிநாத பிள்ளை செயலாளராவார்.

•அரசஞ் சண்முகநார், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், நீ.கந்தசாமி பிள்ளை, தட்சிணா மூர்த்தி பிள்ளை, கல்யாண சுந்தரம் பிள்ளை, பாலசுப்பிர மணிய பிள்ளை முதலானோர் இச்சங்கத்தின் உறுப்பினராவர்•.

•தமிழ்த் தாத்தா உ,வே.சாமிநாத அய்யர்• அவர்கள் பலமுறை இச்சங்கத்திற்கு வந்து, தங்கி தமிழாராய்ச்சியில் ஈடுபடுவதுண்டு. மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர் பாண்டித் துரை தேவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் இச்சங்கத்திற்குக் கிடைத்தது. இதன் விளைவாக வித்தியா நிகேதனம் சிறப்புடன் தமிழ்ப் பணியாற்றி வந்தது.இவ்விதம் பாண்டித்துரை தேவரின் முயற்சியில் தமிழ் தழைத்தோங்கியது.

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்த தேவமார்கள்.

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்த தேவமார்கள்.

திருமயம் வட்டம், செவலூரில் பள்ளர்களுக்கு குடிநீர் குளம் இல்லாமல் இருந்தது. இதனால் நாயகத்தாத் தேவன்- உத்திங்கத்தேவன்- பசுப்பத்தேவன்- சிலம்பத்தேவன் ஆகிய நால்வருக்கும் காணியாட்சியாக இருந்த அரங்கன் வயல் நிலத்தில் குடிநீர்க்குளம் வெட்டிக் கொண்டு, தண்ணீர் தேக்கி அதைச் சந்திர சூரியர் உள்ளவரைக்கும் பள்ளர்கள் அனுபவித்துக்கொள்ளவும், இதை அழிக்க முற்படுபவர்கள் சேதுபதி அரண்மணைக்கு 24 பொன் அபராதமாகச் செலுத்துவதோடு, சாதியை விட்டு நீக்கப்படுவார்கள் என்றும், இது நாகநாத சேதுபதி காத்தத்தேவரின் பாதத்தின் மீது சத்தியம் என்றும், அதோடு இந்த சத்தியம் எப்போதும் தப்பாது என்றும், இதை மீறியவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தில் போவார்கள் என்றும் கல்வெட்டி வைத்துள்ளனர். இந்த சாசனத்தை அரசாணையாகப் பிறப்பித்தவர் சேதுபதியின் பிரதானியான உலகப்பன் சேர்வைக்காரர். கல்லெழுத்து எழுதியவர் தியாகன் குருந்தன். இந்த ஊருணி இன்றும் பள்ளன் ஊரணி என்றே வழங்கப்படுகிறது.

அத்திவெட்டி பாளையக்காரர் ஆகாசன சேர்வைக்காரர் பற்றிக் கூறும் செப்பேடு.

அத்திவெட்டி பாளையக்காரர் ஆகாசன சேர்வைக்காரர் பற்றிக் கூறும் செப்பேடு.

1)திருமக்கோட்டை மெய்க்கு நாகநாதேஸ்வரர் கோயிலுக்கு (அத்திவெட்டி) வாவாசிக் கோட்டை பாளையக்காரரான ஆகாசன சேர்வைக்காரர் மகன் உடையப்பன் சேர்வைக்காரர், அவர் மகன் ரகுநாத சேர்வைக்காரர் அவர்கள் திருமக்கோட்டை ஊரிலுள்ள நன்செய்- புன்செய் நிலங்களில் இருந்து அரண்மனைக்கும்- குடிகளுக்கும் பொதுவாக வைத்து எட்டு மரக்கால் மூன்று நாழி விளைச்சலை அக் கோயில் இரவுநேரப் பூசைக்காகத் தானம் தந்ததை ஊர்க் கணக்கு வைத்தியநாதன் பிள்ளை மூலம் செப்பேடு செய்வித்தும்.

2) அதே கோயில் கட்டளைக்கும், சித்தி வினாயகருக்கும்,2000குழி நிலத்தை குடிவாரம் விட்டு மேல்வார வருமானத்தில் தினமும் இருநாழி அரிசி, நெய்வேத்தியமும், வெள்ளிக்கிழமை தோறும் நல்லெண்ணெயும், திருமஞ்சனம் செலவுகளும், மாதந்தோறும் திருவிளக்கு எண்ணைக்கும், கோயில் செலவுகளுக்காக, கோவிந்த நத்தம் ஊரிலிருக்கும் திருவத்தேவர் மகன் கூத்தப் பெருமாள் தேவர், ராமத்தேவர் மகன் லட்சுத் தேவர் மற்றும் அடைக்கத்தேவர், நாராயணத்தேவர்,ராமலிங்கத்தேவர் ஆகியோர் கூடி தானமளித்து செப்பேடு செய்வித்தும்,.

3) இதே கோயிலுக்கு, தஞ்சை மன்னர் சரபோஜி ஆட்சிக் காலத்தில், பெரிய கோட்டை மாகாணத்தைச் சேர்ந்த ஸ்ரீ கானுசாயுபு மற்றும் சிங்கராச பண்டிதர், அபாலுதாரர் உகந்த நாசியா பிள்ளை முதலிய பெருவிவசாயிகள் கூடி, அந்த மாகாணத்தைச் சேர்ந்த ஆவிக்கோட்டை- கழிச்சாங்கோட்டை- உலையக்கொன்றம்- கண்ணியாகுறிச்சி- சொக்கநாத நல்லூர்- ஆகிய ஐந்து கிராமத்தைச் சேர்ந்த நன்செய்-புன்செய் நிலங்களில் இருந்து வரும் விளைச்சலில் அரண்மனைக்கும் குடிகளுக்கும் பொதுவில் வைத்து 1.கலம்- 1.நாழியில் அளந்து காலத்திற்கும் தானமளித்து வரும்படியும், செப்பேடு கொடுத்து, இதில் உலயக்கொன்றம் கண்ணப்பத்தேவர், கழிச்சாங்கோட்டை கஞ்சமலைத்தேவர்- சிதம்பரத்தேவர்,கணியாகுறிச்சி வாலாமுத்துத்தேவர்-நல்லகுட்டித் தேவர், சொக்கநல்லூர் ஆதியப்பத்தேவர்- குப்பத்தேவர்- லட்சுமணத்தேவர்- ஆகிய தேவமார்களும், உகந்த நாசியா பிள்ளை- திருமலைக்கொழுந்தா பிள்ளை முதலிய பிள்ளைமார்களும், அய்யா முதலியாரும்,ஆவிக்கோட்டை நல்லநாடன்- கலிக்கநாடன் முதலிய நபர்களும் ஒப்பமிட்டுள்ளனர்.

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்

Comment

தேவர்_சாதிச்சான்றிதழ்

கேரளா, பாண்டிச்சேரி மற்றும் கர்நாடகாவில் தேவர் எனவும், அதன் உட் பிரிவுப் பட்டியலில் கள்ளர் மறவர் அகம்படியர் என்றும் தேவமார்கள் வகைப்படுத்தப் பட்டு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள போது தமிழகத்தில் மட்டும் ஏன் அவ்விதம் வகைப்படுத்தப்படக்கூடாது என்று கேட்கிறோம். ஆகவே தமிழகத்திலும் இந்த நடைமுறையை அரசு சாதிப் பட்டியலில் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

#தேவர்_சாதிச்சான்றிதழ்

Design a site like this with WordPress.com
Get started